செய்திகள்
விபத்து நடந்த லாரி

அருப்புக்கோட்டை அருகே லாரி கவிழ்ந்து விபத்து

Published On 2020-12-23 08:03 IST   |   Update On 2020-12-23 08:03:00 IST
அருப்புக்கோட்டை அருகே லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடுவே உள்ள தடுப்பில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அருப்புக்கோட்டை:

திருச்சுழி மல்லம்பட்டியில் இருந்து டிப்பர் லாரியில் கிராவல் மண் ஏற்றிக்கொண்டு புலியூரானைச் சேர்ந்த டிரைவர் சீனிவாசன் கரிசல்குளத்துக்கு சென்று கொண்டிருந்தார். அருப்புக்கோட்டை அருகே நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது ரெயில்வே மேம்பாலம் அருகே லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடுவே உள்ள தடுப்பில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் சீனிவாசன் சிறு காயத்துடன் உயிர் தப்பினார். இச்சம்பவத்தால் மதுரை-தூத்துக்குடி நான்கு வழி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News