செய்திகள்
லாட்டரி சீட்டுகள் விற்ற 4 பேர் கைது
கிருஷ்ணகிரி அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அப்போது லாட்டரி சீட்டு விற்ற வேப்பனப்பள்ளி ஈத்கா தெருவை சேர்ந்த ரசூல் (வயது 28), சாதிக் (47), ராஜா (57), தேன்கனிக்கோட்டை மஜித் தெரு சபீர் அகமது (55) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டன.