செய்திகள்
சரக்கு ரெயில் பெட்டிகள் மூலம் வந்த அரிசி

தெலுங்கானாவில் இருந்து சரக்கு ரெயிலில் சின்னசேலத்துக்கு 57 ஆயிரம் அரிசி மூட்டைகள் வந்தன

Published On 2020-12-22 08:28 IST   |   Update On 2020-12-22 08:28:00 IST
தெலுங்கானா மாநிலம் பெத்த பள்ளியிலிருந்து 47 சரக்கு ரெயில் பெட்டிகள் மூலம் 2ஆயிரத்தி 800 டன் எடையுள்ள 57 ஆயிரம் மூட்டை புழுங்கலரிசி சின்னசேலம் ரெயில் நிலையத்திற்கு நேற்று வந்தது.
சின்னசேலம்:

தெலுங்கானா மாநிலம் பெத்த பள்ளியிலிருந்து 47 சரக்கு ரெயில் பெட்டிகள் மூலம் 2ஆயிரத்தி 800 டன் எடையுள்ள 57 ஆயிரம் மூட்டை புழுங்கலரிசி சின்னசேலம் ரெயில் நிலையத்திற்கு நேற்று வந்தது. பின்னர் இந்த அரிசி மூட்டைகளை லாரிகள் மூலம் சின்னசேலம்-கூகையூர் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில் இறக்கி வைக்கப்பட்டது.

இந்த பணிகளை சின்னசேலம் கிடங்கு மேலாளர் பிரபு, துணை கிடங்கு மேலாளர் சுந்தரமூர்த்தி, இந்திய உணவுக் கழக மேலாளர் சகாதேவன், தர ஆய்வு உதவியாளர் திருநீலகண்டன், இளநிலை உதவியாளர் சுவீட் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த அரிசி மூட்டைகள் அனைத்தும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News