செய்திகள்
கோப்புபடம்

கொளப்பாக்கத்தில் ஆந்திர வாலிபர் மர்ம மரணம்

Published On 2020-12-21 20:13 IST   |   Update On 2020-12-21 20:13:00 IST
கொளப்பாக்கத்தில் ஆந்திர வாலிபர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வண்டலூர்:

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர் சுப்பாரெட்டி (வயது 30). வண்டலூர் அருகே கொளப்பாக்கத்தில் தங்கி ரத்தினமங்கலத்தில் உள்ள மருந்து கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் மயங்கிய நிலையில் இருந்த சுப்பாரெட்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News