செய்திகள்
இளையான்குடி அருகே மொபட் மீது பஸ் மோதியதில் கோவில் பூசாரி பலி
இளையான்குடி அருகே மொபட் மீது பஸ் மோதியதில் கோவில் பூசாரி பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளையான்குடி:
இளையான்குடி அருகே வாணி கிராமத்தில் கருமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக சுந்தரசாமி தேவர் (வயது 77) இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் கோவில் பூஜையை முடித்து விட்டு மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். வாணி விலக்கில் சென்ற போது எதிரே வந்த அரசு பஸ், மொபட் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு இளையான்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் இளையான்குடி போலீசார் அரசு பஸ் டிரைவர் நாகசாமியை(52) கைது செய்தனர்.