செய்திகள்
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு - வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்
செங்கல்பட்டில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
செங்கல்பட்டு:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஆட்சிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 36). இவர் செங்கல்பட்டு அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரத்தில் 17-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீசாரால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்றது. இந்த நிலையில் காளிதாஸ்க்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு நீதிபதி அம்பிகா, 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.