செய்திகள்
கைது

அரியலூர் அருகே மது விற்ற 2 பேர் கைது

Published On 2020-12-12 12:58 IST   |   Update On 2020-12-12 12:58:00 IST
அரியலூர் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் துணை சூப்பிரண்டு தேவராஜ் அறிவுறுத்தலின்படி ஜெயங்கொண்டம் சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலக்குடியிருப்பு மற்றும் பிச்சனூர் பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று சோதனை செய்தனர்.

அப்போது மேலக்குடியிருப்பு கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரும், பிச்சனூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்ணன் என்பவரும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி, மணிகண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மொத்தம் 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News