செய்திகள்
ஜெயங்கொண்டத்தில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
ஜெயங்கொண்டத்தில் அனுமதியின்றி லாட்டரி சீட்டுகளை விற்றவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 160 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு லாட்டரி சீட்டுகள் விற்ற அதே பகுதியை சேர்ந்த சம்பத்(வயது 50) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 160 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.