செய்திகள்
நீரில் மூழ்கி 3 சிறுமிகள் பலி

செங்கல்பட்டு அருகே குளத்தில் மூழ்கி மூன்று சிறுமிகள் பலி

Published On 2020-12-09 16:59 IST   |   Update On 2020-12-09 16:59:00 IST
திருப்போரூர் அருகே நீச்சல் தெரியாததால் குளத்தில் மூழ்சி மூன்று சிறுமிகள் பலியான சம்பவம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஆலத்தூரில் உள்ள குளத்தில் மூன்று சிறுமிகள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஆழமான இடத்திற்குச் சென்றதாக தெரிகிறது. ராகிணி (6), ரம்யா (4), சாதனா (5) ஆகிய மூன்று பேருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மூன்று சிறுமிகள் ஒரே நேரத்தில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News