செய்திகள்
திருட்டு

நரிக்குடியில் டாஸ்மாக் கடையில் துளை போட்டு மதுபாட்டில்கள் திருட்டு

Published On 2020-12-09 15:13 IST   |   Update On 2020-12-09 15:13:00 IST
நரிக்குடியில் டாஸ்மாக் கடையில் துளை போட்டு மதுபாட்டில்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காரியாபட்டி:

நரிக்குடி சமத்துவபுரம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக விஜய கோபியும், விற்பனையாளர்களாக சோலை ராஜ் மற்றும் குருவி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

நேற்றுமுன்தினம் இவர்கள் வழக்கம்போல் டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு சென்றனர். இந்தநிலையில் நேற்று அவர்கள் கடையை திறக்க வந்த போது டாஸ்மாக் கடையின் சுவரில் துளைபோட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவர்கள் இதுகுறித்து நரிக்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நரிக்குடி போலீசார் விரைந்து வந்து சோதனை செய்தனர். அப்போது கடையின் சுவரில் துளை போட்டு உள்ளே புகுந்த மர்மநபர்கள் அங்கிந்த லாக்கரை உடைக்க முயன்றதும், லாக்கரை உடைக்க முடியாததால் கடையில் இருந்த 56 மது பாட்டில்களை திருடி சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து டாஸ்மாக் சூப்பர்வைசர் விஜய கோபி கொடுத்த புகாரின் பேரில் நரிக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கடையில் மதுபாட்டில்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News