செய்திகள்
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 15 இடங்களில் புதிய நீர்வீழ்ச்சிகள்
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 15 இடங்களில் புதிய நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் குன்னூரில் இருந்துமேட்டுப்பாளையம் வரை செல்லும் சாலையானது மலைகளை குடைந்து அமைக்கப்பட்டது ஆகும். மழைக்காலத்தில் மலையில் உச்சியில் இருந்து புதிய நீர்வீழ்ச்சிகள் உருவாகி மேற்கண்ட சாலையில் அமைந்துள்ள பாலத்தின் கீழ் பகுதி வழியாக தண்ணீர் பாய்ந்தோடுகின்றன. இந்த தண்ணீரானது மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கலந்து, பவானிசாகர் அணையை அடைகிறது.
ஆனால் கோடை காலத்தில் அந்த நீர்வீழ்ச்சிகள் வறண்டு விடுகின்றன. மழைக்காலத்தில் நீர்வீழ்ச்சிகள் புத்துயிர் பெறுகின்றன. அவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். அதன்படி தற்போது வடகிழக்கு பருவமழையால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் சுமார் 15 இடங்களில் புதிய நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளன. லாஸ் நீர்வீழ்ச்சி, மரப்பாலம் ஆகிய பகுதிகளில் மலை உச்சியில் இருந்து ரெயில் பாலம் வழியாக பாய்ந்தோடும் தண்ணீரை குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் நின்று பார்த்தால் கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.