செய்திகள்
போடூர்பள்ளத்துக்கு விரட்டப்பட்ட 30 யானைகள்

30 யானைகள் போடூர்பள்ளத்துக்கு விரட்டப்பட்டன

Published On 2020-12-04 18:35 IST   |   Update On 2020-12-04 18:35:00 IST
ஓசூர் அருகே, சானமாவு காட்டில் இருந்து 30 யானைகள் போடூர்பள்ளத்துக்கு விரட்டப்பட்டன.
ஓசூர்:

தேன்கனிக்கோட்டை ஊடே துர்க்கம் வழியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓசூர் அருகே சான மாவு காட்டுக்கு 30-க்கும் மேற்பட்ட யானைகள் வந்தன. பின்னர் இவை சுற்றுப்புறமுள்ள கிராமங்களில் சுற்றித்திரிந்தவாறு இருந்தன. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகவும் அச்சமடைந்தனர். மேலும் இந்த யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டுமாறு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து நேற்று மாலை வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானை கூட்டத்தை சூளகிரி அருகேயுள்ள போடூர்பள்ளம் காட்டுக்கு விரட்டினர். மேலும் இந்த யானைகளை அங்கிருந்து, ஏ.செட்டிப் பள்ளி, அத்திமுகம், பேரிகை வழியாக கர்நாடக மாநில வனப்பகுதிக்கு ஓரிரு நாளில் விரட்ட உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Similar News