செய்திகள்
மரணம்

கடலூர் மாவட்டத்தில் கனமழை- வீட்டு சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலி

Published On 2020-12-04 13:16 IST   |   Update On 2020-12-04 13:16:00 IST
கடலூர் மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி:

வங்க கடலில் உருவான புரெவி புயல் காரணமாக கடலோர மாவட்டமான கடலூர் பகுதியில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

நேற்று விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக கடலூர் நகர் பகுதியில் உள்ள கூத்தப்பாக்கம், பாதிரி குப்பம், செம்மண்டலம், குண்டுஉப்பலவாடி, கடலூர் முதுநகர் உள்ளிட்ட பகுதியில் மழைநீர் சாலைகளில் ஆறாக ஓடியது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் நகர் பகுதியில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழை காரணமாக பண்ருட்டி அருகே கீழிருப்பு, மதுராபெரியகாட்டுப் பாளையத்தை சேர்ந்த தனமயில் இறந்து போனார்.

இவர் தனது ஓடு வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார்.

இதேபோல் பண்ருட்டி அருகே நத்தம்காலனி பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகள் சஞ்சனா வீட்டின் சுவர் இடிந்து பலியானார்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் பண்ருட்டி பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து வருகிறது. இதனால் அங்குள்ளவர்கள் தவித்து வருகின்றனர்.

Similar News