செய்திகள்
பெருமாள் ஏரி திறப்பால் 23 கிராமங்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை
பெருமாள் ஏரி திறப்பால் அகரம், பூண்டியாங்குப்பம், பெரியபட்டு உள்பட 23 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பண்ருட்டி:
கடலூரை அடுத்த ஆலப்பாக்கம் அருகே பெருமாள் ஏரி உள்ளது. தொடர் மழை காரணமாக இந்த ஏரி முழு கொள்ளளவான 6½ அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் 9,800 கனஅடி உபரிநீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.இதன் காரணமாக ஆதிநாராயணபுரம், திருச்சோபுரம், ஆலப்பாக்கம், அகரம், பூண்டியாங்குப்பம், பெரியபட்டு உள்பட 23 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த கிராமங்களை எந்த நேரத்திலும் வெள்ளம் சூழ்ந்து விடும் அபாய நிலை உள்ளதால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமையிலான மீட்பு குழுவினர் அதிரடி நட வடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.