செய்திகள்
ஓடையில் தக்காளி கொட்டப்பட்டுள்ள காட்சி.

ஓடையில் தக்காளியை கொட்டும் விவசாயிகள்

Published On 2020-11-29 08:47 GMT   |   Update On 2020-11-29 08:47 GMT
வரத்து அதிகரிப்பால் விலை கிடைக்காததால், சத்திரப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஓடைகளில் தக்காளியை கொட்டிச்செல்லும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
சத்திரப்பட்டி:

ஒட்டன்சத்திரம் தாலுகா சத்திரப்பட்டி, தாசரிபட்டி, புதுக்கோட்டை, விருப்பாட்சி, சிந்தலவாடம்பட்டி, கொத்தயம், தேவத்தூர், விராகிரிகோட்டை ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். சாதகமான பருவநிலை நிலவியதால் சத்திரப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தக்காளி விளைச்சல் அதிகரித்தது. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கும் தக்காளி வரத்து அதிகமானது. இதனால் மார்க்கெட்டில் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தது.

கடந்த மாதம் வரை 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.250 முதல் ரூ.300 வரை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் விற்பனை ஆனது. ஆனால் தற்போது ஒரு பெட்டி தக்காளிக்கு ரூ.100 முதல் ரூ.120 வரையே விலை கிடைக்கிறது. கட்டுப்படியான விலை கிடைக்காததால், சத்திரப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஓடைகளில் தக்காளியை கொட்டிச்செல்லும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News