அரூர் அருகே மது விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரூர் அருகே மது விற்ற 9 பேர் கைது
பதிவு: நவம்பர் 22, 2020 19:46
கோப்புபடம்
அரூர்;
அரூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் தீவிர ரோந்து சென்றனர். அப்போது அரூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றதாக ஸ்டாலின் (வயது 30), செல்வம் (48), விஜயன் (39), சரளா (60), பிரபு (42), காளிதாஸ் (32), மணிமாறன் (38) உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 265 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.