செய்திகள்
புதுவை முதல்வர் நாராயணசாமி

பட்டு வேட்டி-சட்டை, அங்கவஸ்திரத்துடன் உலா வந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி

Published On 2020-11-15 08:15 GMT   |   Update On 2020-11-15 08:15 GMT
மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தின நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி வழக்கமான வெள்ளை கதர் வேட்டி, சட்டை அணியாமல் பட்டு வேட்டி, பட்டு சட்டை, பட்டு ஜரிகையுடன் கூடிய அங்கவஸ்திரம் அணிந்து புதிய கெட்டப்பில் வந்தார்.
புதுச்சேரி:

மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தின நிகழ்ச்சி புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

நேருவின் உருவ படத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து கடற்கரை சாலையில் அரசு சார்பில் நடந்த விழாவில் நேருவின் சிலைக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி வழக்கமான வெள்ளை கதர் வேட்டி, சட்டை அணியாமல் பட்டு வேட்டி, பட்டு சட்டை, பட்டு ஜரிகையுடன் கூடிய அங்கவஸ்திரம் அணிந்து புதிய கெட்டப்பில் வந்தார்.

அவரை பார்த்த காங்கிரஸ் நிர்வாகிகள், தலைவர் மாப்பிள்ளை கெட்டப்பில் அசத்துவதாக கூறினார்கள். அதற்கு நாராயணசாமி இன்று தீபாவளி இப்படி ஏதாவது ஒரு நாளில் இதுபோல் அணிந்தால் தான் உண்டு என மகிழ்ச்சியுடன் கூறினார்.
Tags:    

Similar News