செய்திகள்
பணி நேரத்தை குறைக்கக்கோரி குன்னூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நேரத்தை குறைக்கக்கோரி குன்னூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி:
டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு 2019-2020-ம் ஆண்டிற்கான தீபாவளி போனஸ் வழங்க ஆவன செய்ய வேண்டும் என்பது உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் குன்னூரில் உள்ள டாஸ்மாக் குடோன் முன்பு நேற்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு நிர்வாகி நவீன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.