செய்திகள்
கைது

விவசாயியை அரிவாளால் வெட்டிய வழக்கில் தொழிலாளி கைது

Published On 2020-11-07 20:59 IST   |   Update On 2020-11-07 20:59:00 IST
அந்தியூர் அருகே விவசாயியை அரிவாளால் வெட்டிய வழக்கில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
அந்தியூர்:

அந்தியூர் அடுத்த சேத்தனாம்பாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 14-ந் தேதி கடைக்கு தேவையான மளிகை பொருட்களை கடை முன் லாரியை நிறுத்தி இறக்கி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் இதுபற்றி கேட்டு உள்ளார். இதனால் சீனிவாசனுக்கும், கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. 

இதில் சீனிவாசனுக்கு ஆதரவாக அவருடைய தம்பி விவசாயியான பரந்தாமனும், கிருஷ்ணமூர்த்திக்கு ஆதரவாக அவருடைய உறவினரான தொழிலாளி அய்யண்ணன் என்பவரும் வந்து உள்ளனர். தகராறு முற்றியதில் அரிவாளை எடுத்து பரந்தாமனை அய்யண்ணன் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். 

இதுகுறித்த புகாரின் பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அய்யண்ணனை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் அய்யண்ணனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Similar News