செய்திகள்
இளையான்குடியில் மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் - 4 பேர் மீது வழக்கு
இளையான்குடியில் மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.
இளையான்குடி:
இளையான்குடி அருகே உள்ள முனைவென்றி கிராமத்தில் லட்சுமணன் என்பவரது நிலத்தில் மணல் கடத்துவதாக கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் சம்பவ இடத்துக்கு சென்றார். கிராம நிர்வாக அலுவலரை பார்த்ததும் மணல் அள்ளியவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதன் பின்னர் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிப்பர் லாரியை கிராம நிர்வாக அலுவலர் பறிமுதல் செய்து இளையான்குடி போலீசில் ஒப்படைத்தார்.
இது குறித்த புகாரின் பேரில் லாரியின் உரிமையாளர் குமாரக்குறிச்சியை சேர்ந்த ராஜசேகரனின் மனைவி தேன்மொழி, முனைவென்றியை சேர்ந்த சரத்குமார், கவுதமன், லட்சுமணன் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.