செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பி.எஸ்.என்.எல் ஊழியர்கள்

காரைக்குடியில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-11-04 15:11 IST   |   Update On 2020-11-04 15:11:00 IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்குடி தலைமை அலுவலகத்தில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடி:

நீதிமன்ற உத்தரவின்படி தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளத்தை உரிய காலத்திற்குள் வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்குள் சம்பள பாக்கி தொகையை முதல் தவணையை பட்டுவாடா செய்ய வேண்டும். பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் பல ஆண்டுகளாக வேலை செய்து வரும் ஊழியர்களை நீக்கம் செய்யக்கூடாது. பணி செய்த காலம் முழுவதற்குரிய இ.பி.எப் தொகையை வழங்க வேண்டும். காரைக்குடி பகுதியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.427 சம்பளம் வழங்க வேண்டும்.

காரைக்குடி மற்றும் ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு குத்தகையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாநிலம் முழுவதும் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டம் நடத்தினர்.

காரைக்குடி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளன மாவட்ட செயலாளர் மாரி தலைமை தாங்கினார்.

அகில இந்திய ஓய்வு பெற்றோர் நலச்சங்க மாவட்ட செயலர் சுபேதார் அலிகான் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி (சி.பி.ஐ) மாவட்ட செயலர் கண்ணகி சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளன மாவட்ட தலைவர் லால்பகதூர், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் முருகன், கிளைச்செயலர் ஆரோக்கியதாஸ், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Similar News