கூடுவாஞ்சேரியில் டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடுவாஞ்சேரியில் டிரைவர் கொலை வழக்கில் 2 பேர் கைது
பதிவு: அக்டோபர் 30, 2020 15:20
கோப்புபடம்
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பிரியா நகரை சேர்ந்தவர் ஞானதாஸ் (வயது 28) , இவர் கோவளம் அருகே உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு கூடுவாஞ்சேரி மீன் மார்க்கெட் திரவுபதி அம்மன் கோவில் அருகே ஞானதாஸ் பீர் பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஞானதாஸ் கொலை வழக்கில் கூடுவாஞ்சேரி பெரியார் ராமசாமி தெருவை சேர்ந்த பிரபாகரன் (26), கூடுவாஞ்சேரி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வினித்குமார் (24) ஆகியோரை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.