செய்திகள்
இருளர் இன மக்களுக்கு மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா சாதி சான்றிதழ்களை வழங்கியபோது எடுத்த படம்.

காஞ்சிபுரத்தில் 204 பயனாளிகளுக்கு ரூ.1½ கோடியில் நலத்திட்ட உதவிகள்- மாவட்ட கலெக்டர் வழங்கினார்

Published On 2020-10-13 13:08 GMT   |   Update On 2020-10-13 13:08 GMT
காஞ்சிபுரம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 204 பயனாளிகளுக்கு ரூ.1½ கோடி மதிப்பீட்டில் உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா காஞ்சீபுரம் கோட்டத்திற்குட்பட்ட பகுதியை சேர்ந்த பலியான மற்றும் காயமடைந்தவர்களுக்கு முதல்-அமைச்சரின் சாலை விபத்து நிவாரண நிதியாக 129 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் வழங்கினார். இதில், முதல்-அமைச்சரின் சாலை விபத்து நிவாரண நிதியாக கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 414 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 81 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள 10 பயனாளிகளுக்கும், வாலாஜாபாத் வட்டத்தில் 13 பயனாளிகளுக்கும் ரூ.18 லட்சத்து 6 ஆயிரத்து 90 மதிப்பில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.

மேலும், கடந்த ஓராண்டில் மட்டும் 914 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 96 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காஞ்சீபுரம் கோட்டத்தைச் சேர்ந்த 33 இருளர்களுக்கு சாதிசான்றிதழ்கள் நேற்று வழங்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை 616 பயனாளிகளுக்கு இனச்சான்று வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் இறுதியாக காஞ்சீபுரம் கோட்டத்தைச் சார்ந்த 19 முதியோர் பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகையாக ரூ.1,000 வீதம் மொத்தம் ரூ.19 ஆயிரத்தையும் கலெக்டர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சப்-கலெக்டர் செ.சரவணன், காஞ்சிபுரம் வருவாய் வட்டாட்சியர் பவானி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News