செய்திகள்
திமுக தலைமையகம்

தமிழக சட்டமன்ற தேர்தல்- திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 8 பேர் கொண்ட குழு அமைப்பு

Published On 2020-10-11 08:32 GMT   |   Update On 2020-10-11 08:32 GMT
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினைத் தயாரிப்பதற்கு 8 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான களப்பணிகளை தொடங்கிவிட்டனர். வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பதற்காக தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள திமுக, மக்களை கவரும் வகையில் பல்வேறு நலத்திட்ட நலத்திட்டங்களுடன் கூடிய தேர்தல் அறிக்கையை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், கூறியிருப்பதாவது:-

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவினர் விவரம்:

1. டி.ஆர்.பாலு (பொருளாளர்)
2. சுப்புலட்சுமி ஜெகதீசன் (துணை பொதுச்செயலாளர்)
3. ஆ.ராசா (துணை பொதுச்செயலாளர்)
4. அந்தியூர் ப.செல்வராஜ் (துணை பொதுச்செயலாளர்)
5. கனிமொழி எம்பி (திமுக மக்களவை குழு துணை தலைவர்)
6. திருச்சி சிவா எம்பி (கழக கொள்கை பரப்புச்  செயலாளர்)
7. டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி (செய்தி தொடர்புச் செயலாளர்)
8. பேராசிரியர் அ.ராமசாமி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News