செய்திகள்
கவர்னர் கிரண்பேடி

கொரோனாவால் இறந்தவர்கள் சிகிச்சை குறித்து மருத்துவ வல்லுனர் குழு ஆராயும்- கவர்னர் அறிவிப்பு

Published On 2020-09-29 13:46 GMT   |   Update On 2020-09-29 13:46 GMT
புதுவையில் கொரோனாவால் இறந்தவர்கள் சிகிச்சை குறித்து மருத்துவ வல்லுனர் குழு ஆராயப்பட உள்ளது என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடி வாட்அப் பதிவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோயாளிகளுக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்த தனியார் மருத்துவமனை, இந்திய தொழில் கூட்டமைப்பு உறுதி அளித்துள்ளது. அதன் பிறகு தேவைப்படும் ஆம்புலன்ஸ் வாகனங்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆம்புலன்ஸ்களை நியாயமான முறையில் வாடகைக்கு எடுக்க முடியும். பி.ஆர்.டி.சி. பஸ் டிரைவர்களை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலர், போக்குவரத்து, தொழில் துறையினரிடம் பேசுவதாக கூறி உள்ளார்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொடுக்கப்படும் வழிகாட்டுதல் தினமும் அறிக்கையாக வருகின்றது. வருகிற காலங்களில் கொரோனாவில் இறந்தவர் பற்றிய முழு தகவல்கள் பெறப்படும்.

எந்த தேதியில் அனுமதிக்கப்பட்டார். இறந்தவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் என அனைத்து தகவல்களும் பெறப்பட்டு ஆராயப்பட உள்ளது.

ஜிப்மர், இந்திராகாந்தி மருத்துவ கல்லூரி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இணைந்த மருத்துவ குழு ஆராயும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News