செய்திகள்
கொரோனா பரிசோதனை கோப்புப்படம்

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா

Published On 2020-09-29 07:53 IST   |   Update On 2020-09-29 07:53:00 IST
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 29 ஆயிரத்து 166 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 15 ஆயிரத்து 237 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 4 ஆயிரத்து 312 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.

13 ஆயிரத்து 845 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு முகாமில் 14 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வீடுகளில் 51 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் 24 வயது, 20 வயது, 19 வயது நபர்கள், விருதுநகர் கட்டபொம்மன் நகரை சேர்ந்த 39 வயது நபர், 67 வயது முதியவர், சூலக்கரை வி.ஓ.சி. நகரை சேர்ந்த 42 வயது பெண், லட்சுமி நகரை சேர்ந்த 47 வயது நபர், 39 வயது நபர், சாத்தூர், வேலாயுதபுரம், அருப்புக்கோட்டை உள்பட மாவட்டம் முழுவதும் 36 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,273 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று முன்தினம் 633 பேருக்கு மட்டுமே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 750 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தற்போது அதை விட குறைவாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுளளது.

மருத்துவ பரிசோதனை நடைபெறும் இடங்கள் முறையாக அறிவிக்கப்படாததால் பரிசோதனை செய்ய விரும்புபவர்கள் கூட சோதனை முகாம்களை தேடி அலைய வேண்டிய நிலை உள்ளது. விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் நேற்று சிலர்பரிசோதனை செய்ய வந்த போதிலும் முகாம் எங்கு உள்ளது என்பது தெரியாமல் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

மொத்தத்தில் மாவட்டம் முழுவதும் பரிசோதனை நடத்துவதில் போதிய முனைப்பு காட்டாத நிலை உள்ளதால் பரிசோதனை எண்ணிக்கை குறைவதால், பாதிப்பு எண்ணிக்கையும் குறைவாகவே தெரிவிக்கப்படுகிறது.

உண்மை நிலவரம் அறிய மாவட்ட நிர்வாகம் பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளதுடன், முகாம்கள் நடத்தப்படும் இடங்களை பொதுமக்கள் தெரியும் வகையில் முறையாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Similar News