செய்திகள்
முற்றுகை

குத்தாலம் தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

Published On 2020-09-19 15:14 GMT   |   Update On 2020-09-19 15:14 GMT
கீழையூர் கிராமத்திற்கு தனி அங்கன்வாடி கேட்டு குத்தாலம் தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
குத்தாலம்:

குத்தாலம் அருகே தேரழுந்தூர் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் முழுநேர அங்காடி தேரழுந்தூரில் செயல்பட்டு வருகிறது. கீழையூர் கிராம மக்கள் தேரழுந்தூர் முழுநேர அங்கன்வாடிக்கு 4 கிலோ மீட்டர் சென்று ரேசன் பொருட்கள் வாங்கி வரும் அவல நிலை உள்ளது. மேலும் அங்கன்வாடியில் அரிசி, ஆயில், கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வரவில்லை என்றும், மாதம் ஒரு முறைதான் அங்கன்வாடி திறக்கப்படுகிறது என்றும் கீழையூர் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும் அங்கன்வாடிக்கு பொருட்கள் வாங்க சென்றவர்களிடம் போதிய அளவு பொருட்கள் இல்லை என கூறி திருப்பி அனுப்பினர். ஏன் பொருட்கள் இல்லை என்கிறீர்கள் என எதிர்த்து கேட்டனர். இதனால் பொதுமக்களுக்கும் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அங்கன்வாடியை முற்றுகையிட்டனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்று குத்தாலம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கீழையூர் கிராமத்திற்கு தனி அங்கன்வாடி வேண்டும் என்று முறையிட்டனர். இதனால் குத்தாலம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News