செய்திகள்
தமிழகத்தில் இன்று 5,684 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த உயிரிழப்பு 8 ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தில் இன்று புதிதாக 5,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 87 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று புதிதாக 5,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 474940 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 6,599 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை 4,16,715 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்று அரசு மருத்துவமனையில் 44 பேர், தனியார் மருத்துவமனையில் 43 பேர் என 87 பேர் உயிரிழக்க மொத்த பலி 8,012 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 83,266 மாதிரிகளும், 81,066 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 54,62,277 மாதிரிகளும், 52,85,823 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.