செய்திகள்
மாயம்

அந்தியூரில் கொரோனா நோயாளி மாயம்

Published On 2020-08-26 16:12 IST   |   Update On 2020-08-26 16:12:00 IST
அந்தியூரில் மாயமான கொரோனா நோயாளியை தேடும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
அந்தியூர்:

அந்தியூர் பர்கூர் ரோட்டில் வசிக்கும் 40 வயது ஆண் ஒருவர் காய்ச்சல், சளி இருந்ததால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஈரோடு அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக சின்னத் தம்பிபாளையம் அரசு டாக்டர் சக்தி கிருஷ்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் அவரது வீட்டிற்குச் சென்றனர்.

ஆனால் அந்த நபர் வீட்டில் இல்லை. மேலும் கடந்த 2 நாட்களாக வீட்டிற்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் மாயமான கொரோனா நோயாளியை தேடும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து அந்தியூர் போலீஸ் நிலையத்தில் டாக்டர் சக்தி கிருஷ்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் புகார் தெரிவித்துள்ளனர்.

Similar News