செய்திகள்
கண்காணிப்பு கேமரா

ஐம்பொன் சிலை திருட்டு எதிரொலி- பொதுமக்கள் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

Published On 2020-08-26 16:03 IST   |   Update On 2020-08-26 16:03:00 IST
ஈரோடு சாஸ்திரி நகரில் உள்ள கோவிலில் ஐம்பொன் சிலை திருட்டு போன சம்பவத்தையடுத்து, குற்றச்சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
ஈரோடு:

ஈரோடு சாஸ்திரி நகரில் உள்ள ஒரு கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐம்பொன் முருகர் சிலை திருட்டு போனது. இந்த சம்பவம் தொடர்பாக சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருடர்களை தேடி வருகிறார்கள். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாமல் இருப்பதால் திருடர்களை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து அந்த பகுதியில் குற்றச்சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. பொதுமக்களின் நிதி பங்களிப்புடன் ரூ.22 ஆயிரம் செலவில் 3 கண்காணிப்பு கேமராக்கள் வாங்கப்பட்டன. சடையம்பாளையம் ரோடு, குமரன்நகர்வீதி, சாஸ்திரிநகர் வீதி ஆகிய பகுதிகளை நோக்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த கேமராக்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் சூரம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் கலந்துகொண்டு கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். இதில் சக்திவேல், பாஸ்கர், மனோகர், பிரபாகரன், பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News