செய்திகள்
நம்பியூரில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நம்பியூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நம்பியூர்:
நம்பியூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நம்பியூர் தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலார் கிருஷ்ண மூர்த்தி தலைமை தாங்கினார்.
மத்திய தொழிற் சங்க துணை தலைவர் ரவிச்சந்திரன், அய்யா சாமி, பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் முன்னேற்ற சங்க மண்டல தலைவர் கே.கே. பழனிசாமி, டி.டி.எஸ்.எப் மண்டல தலைவர் கலை முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து ஓட்டும் முயற்சியை கைவிட வேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட சம்பள பாக்கியை திரும்ப வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.