செய்திகள்
சபாநாயகர் தனபால்

கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டமா?- சபாநாயகர் நேரில் ஆய்வு

Published On 2020-08-22 06:28 GMT   |   Update On 2020-08-22 06:28 GMT
சென்னை சேப்பாக்கத்தில் கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டத்தை நடத்தலாமா என சபாநாயகர் தனபால் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை:

கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கை வருகிற ஆகஸ்டு 31-ந் தேதி வரை நீட்டித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டத்தை நடத்தலாமா என சபாநாயகர் தனபால் நேரில் ஆய்வு மேற்கொண்டார். சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டனர்.

கொரோனா அச்சுறுத்தலால் இடநெருக்கடி காரணமாக மாற்று இடத்தில் சட்டசபை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 24க்குள் குளிர்கால கூட்டத்தொடர் நடத்த வேண்டும் என்பதால் சட்டசபையை கூட்ட ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News