செய்திகள்
கோத்தகிரியில் கிருமி நாசினி தெளிக்கப்படுவதை படத்தில் காணலாம்.

கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்

Published On 2020-08-20 20:39 IST   |   Update On 2020-08-20 20:39:00 IST
கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோத்தகிரி:

கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். எனவே அவர்கள் வசித்து வந்த குடியிருப்புகள் தனிமைப்படுத்தப்பட்டு, அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இந்த நிலையில் கோத்தகிரி பகுதியில் ஊரடங்கு தளர்வு காரணமாக அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் பொது மக்களின் நெரிசல் அதிகமாக உள்ளது.

எனவே கோத்தகிரியில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் மேற்பார்வையில் முழு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு அந்தப் பகுதிகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பணியில் துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் என சுமார் 150-க்கும் மேற்பட்டோர் சாலைகள், கடைகள், அரசு அலுவலகங்கள், குடியிருப்பு பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து வருகிறார்கள்.

Similar News