செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 170 பேருக்கு கொரோனா

Published On 2020-08-16 14:45 IST   |   Update On 2020-08-16 14:45:00 IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 170 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கையும் 54 ஆக உயர்ந்தது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் புதிதாக 170 பேருக்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 990 ஆக உயர்ந்தது. நேற்று 79 பேர் சிகிச்சைமுடிந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகியிருந்தனர். இதுவரை மொத்தம் 2 ஆயிரத்து 711 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,225 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனாவுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் 23 வயது வாலிபர், 27 வயது வாலிபர், 75 வயது முதியவர், 41 வயது ஆண், 47 வயது ஆண், 62 வயது முதியவர், 60 வயது முதியவர் என 7 பேர் இறந்திருந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 54 ஆக உயர்ந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிற நிலையில், தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதில் பெரும்பாலும் வயதான முதியவர்கள் தான் அதிகம். இருப்பினும் இளம் வயது வாலிபர்களும் பலியாகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொற்று பாதிப்புடன் பலி எண்ணிக்கையும் அதிகரிப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்தில் உள்ள பெருங்களூர், வாராப்பூர், ஆதனக்கோட்டை சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை ஆதனக்கோட்டை வட்டாரத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 47 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Similar News