செய்திகள்
தாறுமாறாக ஓடிய ஆம்புலன்ஸ்

அறந்தாங்கி-காரைக்குடி சாலையில் தாறுமாறாக ஓடிய ஆம்புலன்ஸ்

Published On 2020-08-14 07:04 GMT   |   Update On 2020-08-14 07:04 GMT
அறந்தாங்கி-காரைக்குடி சாலையில் தாறுமாறாக ஓடிய ஆம்புலன்ஸ் காரணமாக பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
அறந்தாங்கி:

அறந்தாங்கி அருகே பூங்குடி அத்தாணி சாலையில் நேற்று பெருமாள், சகாயராஜ் ஆகியோர் ஓட்டிச்சென்ற மொபட்டுகள் மோதிக் கொண்டன. இதில், அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு அறந்தாங்கியில் உள்ள தனியார் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அதனைத்தொடர்ந்து அறந்தாங்கியில் இருந்து தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அந்த ஆம்புலன்ஸ் அறந்தாங்கி-காரைக்குடி சாலையில் வேகமாக சென்ற போது குண்டும்-குழியுமான சாலையால் டயர் பகுதியில் பழுது ஏற்பட்டு தாறுமாறாக ஓடியது.

இதனால், அந்த சாலையில் சென்றவர்கள் அலறியடித்து ஓடினர். பின்னர், ஒருவழியாக டிரைவர் சாமர்த்தியமாக ஆம்புலன்சை நடுரோட்டில் நிறுத்தினார். இதையடுத்து மாற்று ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில் விபத்தில் சிக்கிய இருவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அறந்தாங்கி-காரைக்குடி சாலை மிகவும் பழுதடைந்து குண்டும்-குழியுமாக உள்ளது. இதனால், அவசர தேவைக்கு கூட ஆம்புலன்சை அழைக்க முடியவில்லை. அப்படியே ஆம்புலன்ஸ் வந்தாலும் இதுபோன்ற நிலைதான் ஏற்படுகிறது. ஆகவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News