செய்திகள்
கல்குவாரி நீரில் மூழ்கி பொக்லைன் ஆபரேட்டர் பலி
திருமயம் அருகே கல்குவாரி நீரில் மூழ்கி பொக்லைன் ஆபரேட்டர் ஒருவர் உயிரிழந்தார்.
திருமயம்:
* திருமயம் அருகே உள்ள ஓடையப்பட்டி கல் குவாரியில் தர்மபுரி மாவட்டம் பொம்முடி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 24) என்பவர் பொக்லைன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று வேலை முடிந்து அப்பகுதியிலுள்ள கல்குவாரி பகுதிக்கு குளிக்க சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை.
இதனால், சந்தேகம் அடைந்த அவரது நண்பர்கள் அவரை தேடிச்சென்றபோது சுப்பிரமணியன் கல்குவாரி நீரில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருமயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர், குளிக்கும்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
* திருமயம் அருகே உள்ள மலைக்குடிப்பட்டியை சேர்ந்தவர் நாகப்பன்(வயது 60). விவசாயியான இவர், சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் மதுரை-புதுக்கோட்டை சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் நாகப்பன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நாகப்பன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
* மதுரையிலிருந்து பொ ருட்களை ஏற்றிக்கொண்டு கும்பகோணம் நோக்கி லாரி ஒன்று மதுரை-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பில்லமங்கலம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க டிரைவர் சவுந்தரபாண்டி, பிரேக் பிடித்தார். இதில் லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் சவுந்தரபாண்டி காயமின்றி உயிர் தப்பினார். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருமயம் போலீசார் பொக்லைன் எந்திரம் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
* கீரனூர் அருகே கிள்ளனூரில் வயலுக்கு வைத்த எலி மருந்தை தின்ற மயில் ஒன்று பரிதாபமாக செத்தது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* புதுக்கோட்டை பல்லவன் குளம் அருகே பணம் வைத்து சூதாடிய சின்னதம்பி (49) உள்பட 7 பேரை டவுன் போலீசார் கைது செய்தனர்.
* பேராங்குளம், காமராஜபுரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற ஆறுமுகன் (50), சுப்ரமணி (39) ஆகியோரை கணேஷ்நகர் போலீசார் கைது செய்தனர்.
* கொடும்பாளூர் சத்திரம் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில் தங்களுக்கு வீடுகளை காலி செய்ய காலஅவகாசம் வழங்க கோரியும், மாற்று இடம் ஏற்பாடு செய்து தரும்படியும் மனு கொடுப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கலெக்டர் பங்களா முன்பு நேற்று நின்றிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.