செய்திகள்
முதல் அமைச்சர் நாராயணசாமி

மின்துறை தனியார் மயம் இல்லை - புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

Published On 2020-07-22 17:44 GMT   |   Update On 2020-07-22 17:44 GMT
புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுவை மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டது.  மின் வினியோகத்தை தனியார் மயமாக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என போராட்டக்குழுவின் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட் சில நாட்களுக்கு முன்பு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. கவர்னர் சட்டசபைக்கு வராத நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்ததில் எந்த விதிமீறலும் இல்லை என்று முதல் அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

இந்நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் கமலக்கண்ணன் வழியே சட்டசபையில் தீர்மானம் ஒன்று நிறைவேறியது.  அதில் மின்துறையை தனியார் மயம் ஆக்கப்போவது இல்லை என தெரிவிக்கப்பட்டது.  தீர்மானத்திற்கு, காங்கிரஸ் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்துள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News