செய்திகள்
முககவசம்

முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம்

Published On 2020-07-15 09:37 GMT   |   Update On 2020-07-15 09:37 GMT
தாளவாடி, பெருந்துறையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு:

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலும் பொதுமக்கள் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மாவட்ட கலெக்டர் கதிரவன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் தாளவாடி மற்றும் அண்ணா நகர் பகுதியில் நேற்று தாசில்தார் ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அதிகாரி பிரேம்குமார், சுந்தரவடிவேல் ஆகியோர் நின்றுகொண்டு அந்த வழியாக முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தார்கள். மொத்தம் 71 பேருக்கு தலா 100 ரூபாய் என ரூ.7,100 அபராதம் வசூலிக்கப்பட்டது.

பெருந்துறை அருகே உள்ள கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி பகுதியில் செயல் அலுவலர் கிருஷ்ணன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பவானி ரோடு, ஈரோடு ரோடு, குன்னத்தூர் ரோடு, காஞ்சிக்கோவில் ரோடு முதலான இடங்களில் நின்றுகொண்டு முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்தார்கள்.

முகக்கவசம் அணியாமல் வணிக நிறுவனங்கள், டீ கடைகளில் நிற்பவர்கள், வாகனங்களில் வருபவர்கள் என அனைவருக்கும் தலா ரூ.50 அபராதம் விதித்தார்கள். நேற்று ஒரே நாளில் முகக்கவசம் அணியாமல் வந்த 100 பேருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
Tags:    

Similar News