செய்திகள்
அபராதம்

சமூக இடைவெளி கடைபிடிக்காத கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

Published On 2020-07-14 09:50 GMT   |   Update On 2020-07-14 09:50 GMT
கொடுமுடி அருகே சமூக இடைவெளி கடைபிடிக்காத கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கொடுமுடி:

கொடுமுடி தாசில்தார் ஸ்ரீதர் தலைமையில் வருவாய்த்துறையினர் நேற்று ஈரோடு-கரூர் மெயின்ரோட்டில் உள்ள கடைகளில் ஆய்வில் ஈடுபட்டார்கள். அப்போது சமூக இடைவெளி கடைபிடிக்காத டீக்கடைகள், பேக்கரிகள், வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல் முகக்கவசம் அணியாமல் வந்த 12 பேருக்கு தலா 50 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. மண்டல துணைதாசில்தார் மரியஜோசப், கொடுமுடி பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத், வருவாய் ஆய்வாளர் நிர்மலாதேவி, கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் உள்பட பேரூராட்சி பணியாளர்கள் பலர் இந்த ஆய்வு பணியில் கலந்துகொண்டார்கள்.
Tags:    

Similar News