செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் மனு அளித்த காட்சி

ஊடகவியலாளர்களுக்கு மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை - கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் மனு

Published On 2020-07-10 11:29 GMT   |   Update On 2020-07-10 11:29 GMT
ஊடகவியலாளர்களுக்கு மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.
ஈரோடு:

தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் சிந்தனைச்செல்வன் (மத்தி), வேங்கை பொன்னுச்சாமி (வடக்கு), அழகர்சாமி (கிழக்கு), திருவளவன் (மேற்கு) ஆகியோர் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

ஊடகம் என்பது ஜனநாயகத்தின் 4-வது தூணாக கருதப்படுகிறது. நமது நாடு தற்போது இருக்கும் நெருக்கடியான சூழலில் டாக்டர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார்களின் பங்களிப்பு எவ்வாறு மகத்தானதோ அதே போன்று ஊடகவியலாளர்களின் பங்களிப்பும் மகத்தானது. அவ்வாறு ஜனநாயகத்தின் குரலாக விளங்குகின்ற ஊடகவியலாளர்கள் மீது சிலர் வேண்டுமென்றே தொடர் அவதூறுகளை பரப்பி, அச்சுறுத்தி வருகின்றனர். இது ஜனநாயகத்திற்கு விடுக்கின்ற மிரட்டலாகும். எனவே ஊடகவியலாளர்கள் மீது அவதூறு பரப்பி, அச்சுறுத்தி வருகின்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
Tags:    

Similar News