செய்திகள்
என்.எல்.சி. பாய்லர் விபத்து

என்எல்சி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

Published On 2020-07-05 12:18 GMT   |   Update On 2020-07-05 12:18 GMT
நெய்வேலி என்எல்சி பாய்லர் வெடி விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது
நெய்வேலி:

நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த 1ஆம் தேதி தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் பல தொழிலாளர்கள் சிக்கினர்.  இவர்களில் 6 பேர் உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும், பாய்லர் வெடித்து 7 பேர் பலியான சம்பவத்தில் முதன்மை பொது மேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால் கோதண்டம் சஸ்பெண்ட் என என்.எல்.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த என்.எல்.சி. நிரந்தர தொழிலாளி சிவக்குமார் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது.

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு தொழிலாளி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று உயிரிழந்துள்ளார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்ற தொழிலாளர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags:    

Similar News