செய்திகள்
தொழிலாளி பலி

சத்தியமங்கலம் அருகே மின் வேலியில் சிக்கி தொழிலாளி பலி

Published On 2020-06-28 09:42 GMT   |   Update On 2020-06-28 09:42 GMT
சத்தியமங்கலம் அருகே மின்வேலியில் சிக்கி தொழிலாளி இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் கோபி வாய்க்கால் ரோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 42). விவசாய கூலித்தொழிலாளி.

சத்தியமங்கலம் அருகே உள்ள ராமாபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். விவசாயி. இவர் அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்பை குத்தகைக்கு எடுத்து அங்குள்ள தேங்காய்களை பறித்து விற்பனை செய்து வருகிறார்.

அதே தோட்டத்தின் மற்றொரு பகுதியை விவசாயியான ரங்கசாமி என்பவர் குத்தகைக்கு எடுத்து மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டு உள்ளார். காட்டுப்பன்றிகள் புகுந்து விடக்கூடாது என்பதற்காக தன்னுடைய தோட்டத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைத்து உள்ளார். கிருஷ்ணமூர்த்தியும், மாரியப்பனும் உறவினர்கள் ஆவர்.

இந்த நிலையில் ராமாபுரத்தில் உள்ள மாரியப்பனை பார்ப்பதற்காக கிருஷ்ணமூர்த்தி சென்று உள்ளார். அப்போது தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக மாரியப்பன் சென்றுவிட்டார். இதைதத்தொடர்ந்து அவரை பார்ப்பதற்காக தோட்டத்தின் உள்ளே மாரியப்பன் சென்றார். அப்போது மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ள தோட்ட பகுதிக்கு சென்ற மாரியப்பன், அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை தொட்டு உள்ளார். ஏற்கனவே அந்த கம்பி வேலியில் மின்சாரம் இருந்ததாக கூறப்படுகிறது. இது தெரியாமல் அவர் அந்த மின் கம்பியில் அவர் கையை வைத்துவிட்டார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரங்கசாமியை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News