செய்திகள்
புதுச்சேரி

ஊரடங்கை மீறியதாக புதுவையில் ஒரேநாளில் மொத்தம் 350 பேருக்கு அபராதம்

Published On 2020-06-26 07:42 GMT   |   Update On 2020-06-26 07:42 GMT
ஊரடங்கை மீறியதாக புதுவையில் ஒரேநாளில் மொத்தம் 350 பேரிடம் ரூ.35 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
புதுச்சேரி:

புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று புதிதாக 10 கட்டுப்பாட்டு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டன. அந்த பகுதிகள் விவரம் பின்வருமாறு:-

உச்சிமேடு மதிகிருஷ்ணாபுரம் அண்ணாமலை நகரின் ஒரு பகுதி, ரெட்டியார்பாளையம் பொன் நகர் 3-வது குறுக்கு தெரு மற்றும் கம்பன் நகர் 6-வது குறுக்கு தெரு, சாரம் வெங்கடேஸ்வரா நகர் 3-வது குறுக்கு தெரு மற்றும் ஞானப்பிரகாசம் நகர் 4-வது குறுக்கு தெரு, ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெரு, பிருந்தாவனம் 9-வது குறுக்கு தெரு, ராமன் நகர் எம்.ஒ.எச். வீதி, கருவடிக்குப்பம் மகாவீர் நகர் சிட்டிசன் அவென்யூ, தட்டாஞ்சாவடி வீமன் நகர் ஓடைவீதி.

இப்பகுதிகளில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப் பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட் கள் வினியோகம் மற்றும் அவசர மருத்துவ சேவைக்காக மட்டும் பொதுமக்கள் நடமாட அனுமதிக்கப்படுகிறார்கள்.

புதுவையில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளில் கட்டுப்பாடு மீறியதாக அபராதம் விதிக்கப்பட்ட விவரம் வருமாறு:-

அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்தில் 36 பேர், பாகூரில் 56 பேர், மண்ணாடிப்பட்டில் 72 பேர், நெட்டப்பாக்கத்தில் 40 பேர், வில்லியனூரில் 70 பேர், திரு-பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்தில் 10 பேர், கோட்டுச்சேரியில் 11 பேர், நெடுங்காட்டில் 7 பேர், திருநள்ளாறில் 10 பேர், நிரவியில் 5 பேர், மாகி நகராட்சியில் 33 பேர் என ஒரேநாளில் மொத்தம் 350 பேரிடம் ரூ.35 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் புதுவையில் நேற்று ஊரடங்கு உத்தரவை மீறியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 3 பேர் கைது செய்யப்பட்டனர். 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News