செய்திகள்
மேட்டுப்பட்டி ரேஷன் கடையில் குடிமைப்பொருள் வழங்கல் அலுவலர் பிரவீனா ஆய்வு செய்தார்

ரேஷன் கடையில் ரூ.11 ஆயிரம் பொருட்கள் கையாடல்- போலீசில் புகார்

Published On 2020-06-25 13:50 GMT   |   Update On 2020-06-25 13:50 GMT
ரேஷன் கடையில் ரூ.11 ஆயிரம் பொருட்கள் கையாடல் செய்த விற்பனையாளர் தலைமறைவானார்.
திருவரங்குளம்:

புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டி ரேஷன் கடையில் குடிமைப்பொருள் வழங்கல் அலுவலர் பிரவீனா நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த கடையில் இருப்பு இருந்த பொருட்களுக்கு உரிய கணக்கில் முறைகேடு இருந்ததை கண்டுபிடித்தார். மேலும் கொரோனா நிவா ரணமாக பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட ரேஷன் பொருட்கள் கையாடல் செய்யப்பட்டது தெரியவந்தது.

இதற்கிடையில் அந்த கடையின் விற்பனையாளரான பாலு கடந்த சில நாட்களுக்கு முன்பு பணிக்கு வராமல் சென்றது தெரியவந்தது.

ரேஷன் கடையில் ஆய்வு செய்ததில் அரிசி, பாமாயில், கோதுமை, சர்க்கரை, பருப்பு ஆகியவை மொத்தம் ரூ.11 ஆயிரத்து 25 மதிப்பில் இருப்பு குறைபாடு கண்டறியப் பட்டன.

இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும் படி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் குடிமைப் பொருள் வழங்கல் அலுவலர் புகார் மனு அளித்துள்ளார். மேலும் துறைரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News