செய்திகள்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றபோது எடுத்த படம்.

சத்தியமங்கலம், அந்தியூரில் ரூ.80¾ லட்சத்துக்கு பருத்தி ஏலம்

Published On 2020-06-25 12:02 GMT   |   Update On 2020-06-25 12:02 GMT
சத்தியமங்கலம் மற்றும் அந்தியூரில் ரூ.80¾ லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
ஈரோடு:

சத்தியமங்கலத்தில் உள்ள கோபி ரோட்டில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் பருத்தி ஏலம் நடந்தது. ஏலத்துக்கு சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம், அரசூர், பெரியகுளம், கே.என்.பாளையம், தங்க நகர் உள்பட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 2 ஆயிரம் மூட்டைகளில் விவசாயிகள் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.3 ஆயிரத்து 700-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.4 ஆயிரத்து 200-க்கும் என மொத்தம் ரூ.25 லட்சத்துக்கு விற்பனை ஆனது. சத்தியமங்கலம், திருப்பூர், அவினாசி, புஞ்சைபுளியம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து கலந்து கொண்டு போட்டி போட்டு பருத்தியை ஏலத்தில் எடுத்து சென்றனர்.

இதேபோல் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு 4 ஆயிரத்து 135 மூட்டைகளில் பருத்தியை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.3 ஆயிரத்து 869-க்கும், அதிபட்ச விலையாக ரூ.4 ஆயிரத்து 339-க்கும் என மொத்தம் ரூ.55 லட்சத்து 81 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

சத்தியமங்கலம் மற்றும் அந்தியூரில் ரூ.80 லட்சத்து 81 ஆயிரத்து பருத்தி ஏலம் போனது.

Tags:    

Similar News