செய்திகள்
ஈரோட்டில் கொரோனாவால் இறந்த பெண்ணை அடக்கம் செய்த சமூக ஆர்வலர்கள்
ஈரோட்டில் கொரோனாவால் இறந்த பெண்ணை அடக்கம் செய்த யாரும் முன்வராத நிலையில் சமூக ஆர்வலர்கள் இறுதி சடங்கு அனைத்தையும் முறையாக நிறைவேற்றி அடக்கம் செய்தனர்.
ஈரோடு:
ஈரோட்டில் கொரோனாவால் நேற்று பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய யாரும் முன்வரவில்லை என்றும், தாங்கள் கண்ணியமாக அடக்கம் செய்ய உதவ வேண்டும் என்றும் ஈரோடு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநகர தலைவர் சாதிக் என்பவருக்கு அழைப்பு வந்தது.
அதைத்தொடர்ந்து அவர் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியில் உள்ள சமூக ஆர்வலர்களை தொடர்பு கொண்டார். உடனே அவர்கள் விரைந்து சென்று, இறந்த பெண்ணின் உடலை, உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐ.சி.எம்.ஆர். வலியுறுத்தியுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி, இறந்தவருக்கான இறுதி சடங்கு அனைத்தையும் முறையாக நிறைவேற்றி அடக்கம் செய்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை அடக்கம் செய்த சமூக ஆர்வலர்களின் மனிதாபிமான செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.