செய்திகள்
கைது

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இறைச்சிக்கடை நடத்திய 2 பேர் கைது

Published On 2020-06-23 21:03 IST   |   Update On 2020-06-23 21:03:00 IST
சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இறைச்சிக்கடை நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:

ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் கருங்கல்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு கோழி இறைச்சி கடையில், நோய் தொற்று பரவும் வகையில் சமூக இடைவெளி இல்லாமல் பொதுமக்கள் நின்றதும், முக கவசம் அணியாமல் கடை உரிமையாளர் இறைச்சி வியாபாரம் செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த கடையின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், அதேபகுதியில் செயல்பட்டு வந்த மற்றொரு கோழி இறைச்சி கடையிலும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் இறைச்சி வியாபாரம் செய்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த கடையின் உரிமையாளரையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News