செய்திகள்
அமைச்சர் ராஜலட்சுமி இலவச அரிசி வழங்கிய காட்சி

12 ஆயிரம் பேருக்கு இலவச அரிசி - அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்

Published On 2020-06-14 19:59 IST   |   Update On 2020-06-14 19:59:00 IST
12 ஆயிரம் பேருக்கு இலவச அரிசி பைகளை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.
திருவேங்கடம்:

கொரோனா ஊரடங்கில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சம் குடும்பங்களுக்கு அமைச்சர் சார்பில் அரிசி பை வழங்க முடிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்ச்சியாக 9 மற்றும் 10-ம் கட்டமாக குருவிகுளம் வடக்கு ஒன்றிய பகுதிகளில் 12 ஆயிரம் பேருக்கு அரிசி பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குருவிகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜலட்சுமி கலந்துகொண்டு இலவச அரிசி பைகளை வழங்கினார். குருவிகுளம் வடக்கு ஒன்றியம் பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், சங்குபட்டி, குறிஞ்சாக்குளம், வடக்குப்பட்டி, வரகனூர், வெள்ளாகுளம், ஏ.கரிசல்குளம், உமையத்தலைவன்பட்டி, பிள்ளையார்குளம், கலிங்கப்பட்டி, சம்சிகாபுரம், சுப்புலாபுரம், வீரணாபுரம், காரிசாத்தான் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. 

Similar News