செய்திகள்
கனிமொழி எம்.பி.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் டீன் ஜெயந்தியின் விடுமுறை சந்தேகத்தை எழுப்புகிறது: கனிமொழி எம்.பி.

Published On 2020-06-14 11:35 IST   |   Update On 2020-06-14 11:35:00 IST
கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் வேளையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் டீன் ஜெயந்தியின் விடுமுறை சந்தேகத்தை எழுப்புகிறது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
கனிமொழி எம்.பி. தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் வேளையில், கொரோனாவுக்கான சிகிச்சை வழங்குவதில் மிக முக்கிய பங்காற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி (எம்.எம்.சி) மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் ஆர். ஜெயந்தி திடீரென விடுமுறையில் சென்றிருக்கிறார்.

அதற்கான காரணம் என்னவென்று தெளிவாகக் கூறப்படவில்லை. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் குழப்பம் நிலவிவரும் சூழலில், இந்த விடுமுறை பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது’’ என பதவிட்டுள்ளார்.

Similar News