செய்திகள்
புதுவை சட்டசபை

சட்டசபையை 15 நாள் மூடி சுத்தப்படுத்த வேண்டும்- அன்பழகன் எம்.எல்.ஏ. கோரிக்கை

Published On 2020-06-03 06:31 GMT   |   Update On 2020-06-03 06:31 GMT
புதுவை சட்டசபை வளாகத்தை மூடி 15 நாட்கள் கிருமி நாசினியால் தூய்மைப்படுத்திய பின்னர் திறக்க வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை சட்டமன்ற அ.தி.மு.க. கட்சித் தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று சம்பந்தமாக புதுவை அரசின் அலட்சியத்தால் மக்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உருவாகி உள்ளது. 2 மாதத்துக்கு முன் சுகாதாரத்துறை, காவல்துறை, துப்புரவு துறைகளின் கடின உழைப்பால் புதுவையில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தது. முதல்-அமைச்சரின் மனம்போன தளர்வு நடவடிக்கையால் தற்போது 75-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பரவியுள்ளது.

மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய சட்டமன்ற வளாகத்திலேயே சுகாதார பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. அமைச்சரவை ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மதுக்கடை உரிமையாளர்களால் சட்டசபை வளாகம் 2 மாதங்களாக சந்தைக்கூடமாக மாறியதுதான் இதற்கு காரணம். நாள்தோறும் 50-க்கும் மேற்பட்டோர் முதல்வர் அலுவலகம், கேபினட் வரை ஆக்கிரமித்தனர்.

தற்போது மதுப்பானக்கடை உரிமையாளருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அவர் சட்டசபைக்கு வந்தாரா? யாரிடம் பழகினார்? என ஆராய்ந்து பரிசோதனை செய்ய வேண்டும். புதுவை சட்டசபை வளாகத்தை மூடி 15 நாட்கள் கிருமி நாசினியால் தூய்மைப்படுத்திய பின்னர் திறக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News